எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய சபாநாயகர்..!
சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கடந்த ஆட்சியில் 2021- 26ஆம் ஆண்டில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக 110 விதியின் கீழ் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடலாமே தவிர வழக்குகளை ரத்து என்பதை அறிவிக்கக்கூடாது என்றும், கடந்த காலத்தில் அப்படி அறிவிக்கப்பட்டதில்லை என்றும் வாதிட்டனர்.
ஆனால் அதற்கு சபாநாயகர், முதலமைச்சர் 110 விதியின் கீழ் அதை அறிவிக்கலாம் எனவும், எந்த விதி மீறலும் நடைபெறவில்லை எனவும் கூறினார்.
இதுகுறித்து பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “110 விதியின் கீழ் முதலமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். எங்கள் ஆட்சியில் 110 விதியின் கீழ் அந்த வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை என்று நான் தெரிவித்தேன். அதற்கு உரிய ஆதாரங்களை சபாநாயகர் கொடுத்தார். நாங்கள் 110 விதியின் கீழ் தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். எனவே, நான் பேசியதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்” என்றார்.
அதற்கு சபாநாயகர், “பேசியதை திரும்ப பெற்றுக்கொண்ட உங்கள் பெருந்தன்மையை பாராட்டுகிறேன்” என்று தெரிவித்தார்.
தவறை திருத்திய உதயநிதி பாராட்டிய சபாநாயகர் #Udhayanidhistalin #TNAssembly #jcdprabhakar #thedebate #tamilnews pic.twitter.com/JVOOXcerdc
— The Debate (@thedebatetamil) September 2, 2026

