"விஜய் மக்களுக்கு அள்ளிக் கொடுக்க விரும்புகிறார்"- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

 
s

அள்ளி கொடுத்த மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க நினைக்கிறார் முதலமைச்சர்.. ஆனால் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று தான் கேட்கிறார் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “பட்ஜெட்டில் என்ன வரப்போகிறது என்று உங்களைப் போன்று நானும் ஆர்வமாக இருக்கின்றேன். மக்கள் கிள்ளிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில், அள்ளிக் கொடுத்தார்கள். அப்படி அள்ளிக் கொடுத்த மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். ஆனால் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் என்று தான் கேட்கிறார். ஏழை எளியோருக்கு உதவும் மனம் முதல்வர் விஜய்க்கு இருக்கிறது” என்றார்.