ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு!

 
appavu

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். 

ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் வேளாண் விளைநிலங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு என தனி வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, உள்ளிட்ட பல முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில், மருத்துவம், கல்வி வங்கி மற்றும் நீதி சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் சாலை இணைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை மேம்படுத்த முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ₹4000 கோடி மதிப்பீட்டில் 9,653 கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்துள்ளன. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ₹10 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

 பெரம்பலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன மின் வாகனங்களின் மையமாக கோவை, ஓசூர் மாறியுள்ளதுமுதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வேளாண் விளைநிலங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு என தனி வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, உள்ளிட்ட பல முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கிராமப்புறங்களில், மருத்துவம், கல்வி வங்கி மற்றும் நீதி சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதில் சாலை  இணைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனை மேம்படுத்த முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ₹4000 கோடி மதிப்பீட்டில் 9,653 கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் பணிகள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.