தமிழகத்தின் ஒவைசியா விஜய்? பரபரப்பை கிளப்பும் சபாநாயகர் அப்பாவு

 
ழட் ழட்

நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.


நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, “மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் விமான விபத்து காரணமாக இறந்ததாக கிடைத்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. ஆழ்ந்த அனுதாபங்களை தமிழக சட்ட பேரவை சார்பாக  தெரிவித்துக்கொள்கிறேன். நெல்லை மாவட்டத்தில் முதல் கட்டமாக ஒன்பதாயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டிருந்தது. மடிக்கணினியில் உலகம் முழுவதும் நடைபெறும் விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். ஆட்டம், நடிப்புகளை நம்ப வேண்டாம் மடிக்கணியில் பார்ப்பதை அப்படியே கடந்து சென்று விடுங்கள். கவர்னர் சட்டசபைக்கு வரும் பொழுது இது போன்று செய்வார் என தெரிந்தும் நாங்கள் மரபு படி பின்தொடர்ந்து வருகிறோம். சட்டசபையில் கவர்னர் செய்வதை பார்த்து நாடே சிரிக்கிறது.


எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்தது ஒரு ஓவ்வா கூட்டணி. தமிழக வெற்றி கழகமும் பாஜகவும் நாடகம் செய்து கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்தும் நடித்துக் கொண்டிருக்கிறார். மாணவர்கள் விஜயின் நடனத்தை பார்த்து பின்னால் செல்ல மாட்டார்கள், முன்னாள் நின்று பார்த்துவிட்டு கடந்து சென்று விடுவார்கள், தமிழகத்தின் ஒவைசியாக விஜய் களம் இறக்கப்பட்டுள்ளார். கிறிஸ்தவ சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு செல்லக்கூடாது என்பதே திட்டம். ஜனநாயகன் படத்தை பாஜக சொல்லும் நேரத்தில் வெளியிட வழக்கு தொடர்ந்து நாடகம். பிரதமர் மோடியும், விஜயும் இணைந்து அரசியலில் நடித்து வருகிறார்கள்”  என்று கூறினார்.