தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு ஆய்வு!
Feb 10, 2024, 21:00 IST1707579028000
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் சபாநாயகர் அப்பாவு இன்று ஆய்வு செய்தார்.
வருகின்ற 12.2.2024 அன்று சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் தொடங்க இருப்பதால், சட்டப்பேரவையில் உள்ள கணினி, ஒலிப்பெருக்கி மற்றும் இருக்கைகள் சரியாக உள்ளனவா என்பதை மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் இன்று (10.02.2024) தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, சட்டமன்றப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.