எஸ்.பி.வேலுமணி, தங்கமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி
அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல் அதிமுகவின் தங்கமணி, சண்முகநாதன், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ், கே.சி.வீரமணி, திருத்தணி கோ.அரி, பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணமுரளி, மருதராஜா, செளந்தராஜன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் திருப்பூர் மாநகர் -வேல்குமார் சுவாமிநாதன், திருப்பூர் புறநகர் கிழக்கு செல்வக்குமார், திருப்பூர் புறநகர் மேற்கு -சிவசாமி, திருப்பூர் புறநகர் தெற்கு பொள்ளாச்சி ஜெயராமன், - கோவை புறநகர் மத்தி - வேலுசாமி, திருச்சி புறநகர் தெற்கு - மனோகரன், தஞ்சை மாநகர் - காந்தி, தஞ்சை மத்தி -ராஜமாணிக்கம், புதுக்கோட்டை வடக்கு -பழனிவேல் என பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்களை நியமித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி.

