மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது- எஸ்பி வேலுமணி

 
velumani

கோவை மாநகராட்சியில் ஒருவார காலத்திற்குள் சாலைகள் சீரமைக்கபடவில்லை என்றால் மாபெரும் உண்ணாவிரதம் இருப்போம் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

AIADMK former minister SP Velumani booked in Rs 500 crore scam, raids  ongoing in 26 places- The New Indian Express

கோவை குனியமுத்தூர் 87 மற்றும் 88 வது வார்டுகள் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “10 நாட்காளக இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இது தாழ்வான பகுதி. செங்குளத்தில் நீர் நிறையும் போது இது போன்ற பிரச்சினைகள் வரும் இப்பகுதியில்  சாக்கடைக்கு டெண்டர் விடப்பட்டது. அதை ரத்து செய்து விட்டார்கள். நிறைய லாரிகளில் ரெட்மிக்ஸ் கொண்டு வந்து சாலைகளை சரி செய்ய வேண்டும்.  

கமிஷ்னர், கலெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் வரவில்லை. காலையில் இருந்து அதிகாரிகள் யாரும் வரவில்லை. வயசான அம்மா தண்ணீரில் தவித்து வருகின்றார். அவரை மீட்டு வேறு இடத்தில் தங்க வைத்துள்ளோம். இந்த பகுதியில் மக்களுக்கு எதுவும்  செய்யவில்லை. அதிகாரிகள்  தயவு செய்து வேலை செய்ய வேண்டும். குறிச்சி குளம் பணிகள் ஒன்றரை வருடம் எந்த பணிகளும் நடைபெறவில்லை. டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும்  வரிகள் அதிகம் விதிக்கபட்டுள்ளதால் பணம் இல்லை என்று சொல்லாமல் அடிப்படை பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

சென்னையில் நான் செய்த பணிகளுக்கு பின்பு இதுவரை எந்த வேலையும் பார்க்கவில்லை. கோவை மாவட்ட மக்களை இந்த அரசு புறக்கணிக்கிறது. ஆய்வு செய்த பின்னர் அதிகாரிகளிடம் மனுவாக கொடுக்க போகின்றேன். ஒரு வாரத்தில் சாலையை சீரமைக்கவில்லை என்றால் மிகப்பெரிய உண்ணாவிரம் போராட்டம் நடத்தப்படும். 2011-க்கு பின்பு திருச்சி, பாலக்காடு சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் அதிமுக ஆட்சியில் தான் போடப்பட்டுள்ளது. ஆனால் கோவையில் நடைபெற்ற பாலத்தின் வேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 500 சாலை பணிகள்  நிறுத்தப்பட்டுள்ள. இப்போது மாநகராட்சிக்கு வருமானம் அதிகமாக வருகின்றது. 

சாலை பணிகளை துவங்க வேண்டும் இந்த சாலைகள் ஒரு வாரத்தில் போடப்பட வேண்டும். இல்லை எனில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். நான் அமைச்சராக இருந்த போது  என்னுடன் எத்தனை அதிகரி இருப்பார்கள். இப்போது யாரும் இல்லை. நான். எம்.எல்.ஏ தான் ஆனாலும் மக்களுக்கு பணிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். மக்கள் எங்கே திமுகவை  பாராட்டுகின்றனர் என தெரியவில்லை. யாருக்குமே இங்கு நல்லது பண்ணவில்லை.  ஒரு வாரத்திற்குள் கோவை மாவட்டத்தில் இருக்கும் சாலைகள் சரி செய்யப்பட வில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் . சென்னையில் சாலைகள் சூப்பராக இருப்பதாக சொல்கின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.  நன்றாக கூட மழை பெய்ய வில்லை.  இந்த அரசு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் வேலையை செய்ய வேண்டும்.
தொலைக்காட்சிக்கு நடிக்காமல் வேலை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.