”அதிமுக எங்க கட்சி, நாங்க ஏன் வெளியே செல்ல வேண்டும்”- வேலுமணி

 
“பதவிக்காக ஆசைப்படவில்லை” – எஸ்.பி. வேலுமணி

அதிமுக எங்கள் இயக்கம், நாங்கள் ஏன் அதிமுகவில் இருந்து போக வேண்டும். அந்த கேள்விக்கே இடமில்லை என எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. வேலுமணி, “பிரிந்து சென்ற ஜெயலலிதாவின் தொண்டர்களை அதிமுகவை இபிஎஸ் பலப்படுத்த வேண்டும். வெளியே சென்றவர்களை மீண்டும் இபிஎஸ் அரவணைப்பார் என நம்புகிறோம். அதிமுக எங்கள் இயக்கம், நாங்கள் ஏன் அதிமுகவில் இருந்து போக வேண்டும். அந்த கேள்விக்கே இடமில்லை. என் வீட்டில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் ந்டைபெறவில்லை. வழக்கமாக வருவோரே வந்து சென்றனர். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில்  அதிமுக தோற்றது வருத்தமளிக்கிறது. ்தாராபுரத்தில் இரட்டை இலைக்கான வாக்குகள் குறைந்துள்ளன.  இடைத்தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாக பணியாற்றினோம். கோவையின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது அதிமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சியில்தான் கோவையில் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பொதுச்செயலாளர் இபிஎஸ்-சை விமர்சனம் விரும்பவில்லை. வெளியே சென்றவர்களை மீண்டும் அவர் அரவணைப்பார் என நம்புகிறோம். அதிமுகவின் வாக்கு சரியவில்லை” என்றார்.