அதிமுக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய உறுதியேற்போம் - எஸ்.பி.வேலுமணி!

 
velumani velumani

அதிமுக ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய உறுதியேற்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார். 

தம் வாழ்நாளின் கடைசி மூச்சு வரை, மக்களுக்காகவே வாழ்ந்து, மக்கள் மனங்களை வென்று, ஏழை எளியோரின் நெஞ்சங்களில், இதய தெய்வமாய் குடிகொண்டிருக்கும், மாண்புமிகு புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தில், அவரின் தியாகங்களை நினைவுகூர்ந்து, அவருக்கு என் சிரம் தாழ்ந்த புகழஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.!


மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் குரலாய் ஒலித்துக்கொண்டிருக்கும் கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்களின் தலைமையிலான கழகத்தின் ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைய உறுதியேற்போம் என எஸ்.பி.வேலுமணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.