செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்... காவல்துறைக்கு எஸ்.பி. வேலுமணி கண்டனம்!

 
velumani

தமிழகத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாழும் வகையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் @news7tamil செய்தியாளர் திரு. நேசபிரபு அவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தாக்குதல் தொடர்பாக காவல்துறையிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் விடியா அரசின் காவல்துறை இருந்தது கண்டனத்திற்குரியது. தாக்குதலுக்குள்ளான நியூஸ் 7 தமிழ் செய்தி சேனலின் செய்தியாளர் திரு. நேசபிரபு அவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.


மேலும் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் வலியுறுத்தியது போல, உரிய தண்டனை பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாழும் வகையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும் எனவும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.