தினமலர் நாளிதழுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம்!
எடப்பாடி பழனிசாமிக்கும் தனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன். அதன்பிறகு எனது குடும்ப நண்பர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து எனது மகன் திருமண அழைப்பிதழை வழங்கினேன். அப்பொழுது, முன்னாள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். சொந்த குடும்ப நிகழ்ச்சிக்காக, குடும்ப நண்பரை சந்தித்த நிகழ்வை, இன்றைய தினமலர் நாளிதழ் அரசியல் சாயம் பூசி செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கழகக் கள ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு எனது மகனின் திருமண அழைப்பிதழை, முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினேன்.
— SP Velumani - Say No To Drugs & DMK (@SPVelumanicbe) November 23, 2024
அதன்பிறகு எனது குடும்ப நண்பர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து…
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் கழகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது. இந்நிலையில் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களுக்கும் எனக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.