எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் அதிமுகவில் இணைந்தார்!

 
eps

திமுகவின் துணை பொதுச்செயலாளராக இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதேபோல் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் பாஜகவில் இணைந்தனர். 

இந்த நிலையில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச் சோழன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிம்லா முத்துச்சோழன்  திமுகவில் எனக்கு எந்த முன்னேற்றமும் இல்லாததால் மன உளைச்சலில் விலகியுள்ளேன். அதிமுகவில் நிச்சயம் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.  திமுகவில் விட்டமின் M தான் முக்கியமானதாக உள்ளது என கூறினார். ஆர்.கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.