திமுகவை பின்னுக்கு தள்ளிய சௌமியா அன்புமணி

 
ff

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார்.

r

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்த பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது.  இதில் தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார் . இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Sowmya

இவரைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் ஏ. மணி , அதிமுக வேட்பாளர் அசோகன்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பொன்னி வளவன் ஆகியோரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

✦ பாமக - 25,428

✦ திமுக - 12,064

✦ அதிமுக - 10,064

✦ நாதக - 2,453

 தர்மபுரி பாமக நட்சத்திர வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலை பெற்றுள்ளது பாமக தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது