தருமபுரி தொகுதியில் திடீர் திருப்பம் - செளமியா அன்புமணி பின்னடைவு

 
rrr

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பிடித்த பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது.  இதில் தர்மபுரி தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா அன்புமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார் . மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

r

இந்நிலையில் தர்மபுரி தொகுதியில் காலை முதல் முன்னிலை வகித்து வந்த சௌமியா அன்புமணி தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார்.  திமுக வேட்பாளர் ஆ.மணி 2.82 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.  இவருக்கும் சௌமியா அன்புமணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 6925 என கணக்கிடப்பட்டுள்ளது.

rtt

இருப்பினும் வெற்றி அறிவிப்பு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இதன் மூலம் தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தர்மபுரி,  விருதுநகரில் கடும் இழுபறி  நீடித்த நிலையில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.