“எங்களுக்கு கார் வேண்டாம்.. அதற்கு பதிலாக” - சௌமியா அன்புமணி
Aug 21, 2026, 21:41 IST1787328680304
வாகனத்திற்கான நிதியில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுத்தால் நல்லது என சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செளமியா அன்புமணி, “கார் வேண்டுமா வேண்டாமா என்பது உறுப்பினர்களின் விருப்பத்தை பொறுத்தது. பாமகவில் நாங்கள் இருவரும் கார் வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு கார் வாங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி, எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் குடோன் கட்டிக் கொடுத்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

