இன்னும் எத்தனை பெண்களை திமுக அரசு காவு வாங்க போகிறது?- செளமியா அன்புமணி

 
sa

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Image

ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, “இது போன்று சம்பவத்தில் ஈடுபடும் மிருகங்களை சும்மா விடக்கூடாது, கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிக்கு மூன்று மாதத்திற்குள் தகுந்த தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் பெண்கள் கல்லூரி மாணவிகள் சிறு குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இங்கு நிலவுகிறது. பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என போராட்டம் நடத்த முயற்சி செய்தாலும் அவர்களை கைது செய்வது தான் இங்கு வாடிக்கையாக்கி வருகிறது. இன்னும் எத்தனை பெண்களை இந்த திமுக அரசு காவு வாங்க காத்திருக்கிறது.


குற்றவாளிகளை கைது செய்ய தவறவிட்ட இந்த காவல்துறை போராட்டம் நடத்த முன் வருபவர்களை மட்டும் ஏன் கைது செய்ய எவ்வளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்?. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பேசாமல் வேறு எதற்காக பேசுவார்கள். குற்றவாளிகளை இந்த அரசு கைது செய்து அவர்களுக்கு சிறையில் சலுகைகளை தான் வழங்கி வருகிறது. குற்றவாளிக்கு உடனடியாக தகுந்த தண்டனையை வழங்க வேண்டும்” எனக் கூறினார்.