தடையை மீறி போராட்டம்- செளமியா அன்புமணி கைது

 
Hj

சென்னை அன்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து பசுமைத்தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடத்திய 200 பேர் கைது செய்யபட்டனர். 

ஹ்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போலீசார் அனுமதி மறுத்ததை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் போலீசார் கைது செய்து திருவல்லிக்கேணி வி.ஆர். பிள்ளை தெரு மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.