தென்மேற்கு பருவமழை 3 அல்லது 4 நாட்களில் துவங்கக்கூடும் - சென்னை வானிலை மையம்..!!

 
rain

சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சுமார்3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளம் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இன்று( மே 31), நாளையும்( ஜூன்01)நீலகிரி,கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 2 மற்றும் 3 தேதிகளில்நெல்லை மாவட்டத்தில் மழை பகுதிகள்

கன்னியாகுமரி

தென்காசி

நீலகிரி

கோவை

திருப்பூர்

திண்டுக்கல்

தேனி

நாமக்கல்

ஈரோடு

சேலம்

தர்மபுரி

கிருஷ்ணகிரி

திருப்பத்தூர்,

வேலூர்ராணிப்பேட்டை

திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.

ஜூன் 4 ம் தேதி

நெல்லை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈ ரப்பதமும் இருக்கும் நிலையில் கடலோர மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்
இன்று வானம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 40- 41 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.
தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் 3 அல்லது 4 நாட்களில் துவங்கக்கூடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.