தீபாவளியை ஒட்டி நெல்லை - தாம்ரபம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே..!!
தீபாவளி பண்டிககைக்கு திருநெல்வேலி - தாம்பரம் - திருநெல்வேலி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக திருநெல்வேலி - தாம்பரம் - திருநெல்வேலி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை இயக்குவதாக தெற்கு ரயில்வே மதுரை கூட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - தாம்பரம்

திருநெல்வேலி - தாம்பரம் இடையே நவ.3 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயிலானது திருநெல்வேலி, சேரன் மகாதேவி, கள்ளிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், ராஜபாளையம்,விருதுநகர், மதுரை,திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
தாம்பரம் - திருநெல்வேலி
மறுமார்க்கம் தாம்பரம் - திருநெல்வேலி இடையே நவ.5 திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.


