"தென்மாவட்ட TNSTC பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து செல்லும்" - அமைச்சர் சிவசங்கர்

 
Sivasankar

தமிழகத்தின்‌ தென்‌ மாவட்டங்களுக்கு இயக்கப்படும்‌ நண்ட தூரப்‌ பேருந்துகள்‌ 30.12.2023 முதல்‌ கிளாம்பாக்கத்தில்‌ புதிதாக திறக்கப்பட்ட கலைஞர்‌ கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.   இந்த சூழலில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

BUS

இங்கு 250 ஆம்னி பேருந்துகள் வரை நிறுத்துவதற்கான இடவசதிகள் உள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கென ஐந்து நடை மேடைகளும், ஒரே நேரத்தில் 77 பேருந்துகள் நிறுத்தும் வகையிலும்,  பணியில்லா பேருந்துகள் நிறுத்தம் வகையிலும் இட வசதி உள்ளது. புதியதாக வரும் பயணிகளுக்காக மக்கள் உதவி மையம் அமைக்கப்பட்டு தனியார் பேருந்துகளின் பெயர்கள் வரைமுறைப்படுத்தப்பட்டு எந்த பகுதியில் நிற்கும் என தெரிவிக்கப்பட்டுவருகிறது. 

bus
இந்நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC பேருந்துகளும் ஜனவரி 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்லும். செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும். பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்று  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.