சோகம்..!! தேவர் குருபூஜை பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!
Oct 29, 2025, 10:23 IST1761713593425
பசும்பொன்னில் வரும் 30 தேதி முத்துராமலிங்கத் தேவரின் 63_வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு 8000 போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
காவல் பணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தலைமை காவலர் கலைவாணி (41) என்பவர் வந்துள்ளார். இவர் நேற்று இரவு 12 மணியளவில் கமுதியில் உள்ள தனியார் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது இருமல் தொடர்ச்சியாக ஏற்பட ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த கலைவாணியின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


