இளைஞரணி மாநாட்டுக்கான பாடல் வெளியீடு

 
இளைஞரணி மாநாட்டுக்கான பாடல் வெளியீடு

சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டை வெல்ல செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

Image

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் பெருமைமிகு திமுக இளைஞரணி 2 ஆவது மாநில மாநாட்டுக்கு இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், மாநில உரிமை மீட்பு முழக்கமாக நடைபெறவுள்ள இளைஞர் அணி மாநாட்டுக்கானப் பாடலை கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள், நம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகள் அருகே இன்று வெளியிட்டார்கள்.

Image

நிதி உரிமை - கல்வி உரிமை - மொழி உரிமை - வேலைவாய்ப்பு உரிமை என ஒட்டுமொத்தமாக நம் மாநில உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில் நடைபெற உள்ள கழக இளைஞர் அணி மாநாட்டின் லட்சியத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்புக்குரிய பாடலை வெளியிட்ட கழக பொதுச் செயலாளர் அவர்களுக்கு எங்கள் அன்பும், நன்றியும். ஜனவரி 21 அன்று சேலத்தில் கூடுவோம் - நம் இளைஞரணி மாநாட்டை வெல்லச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.