தந்தையை துப்பாக்கியால் கொல்ல முயன்ற மகன்

 
shooting

வேதாரண்யம் அருகே நாட்டுத் துப்பாக்கியால் தந்தையை கொல்ல முயன்றவர் மகன் கைது செய்யப்பட்டார். 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இன்று மாலை இவரது தந்தை பன்னீர்செல்வத்தை நாட்டு துப்பாக்கியால் சுட்ட போது துப்பாக்கியின் குண்டு அவர் மீது படாமல் பக்கத்தில் இருந்த தண்ணீர் கேன் மீது பட்டு வெடித்துள்ளது. இதில் உயிர் தப்பிய தந்தை பன்னீர் செல்வம், இது குறித்து வேதாரண்யம் போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து பன்னீர் செல்வத்தின் மகன் கருணாநிதியை கைது செய்து விசாரித்த போது தனது மனைவி புனிதா குடும்ப பிரச்சினை காரணமாக தன்னுடன் வாழாமல் தாய்வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கு காரணம் எனது தந்தை தான்.அதனால் தான் அவரை துப்பாக்கியால் சுட்டேன் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர் கருணாநிதியின் வீட்டின் அருகே உள்ள குளத்தில் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை வீசி இருப்பது தெரியவந்தது .குளத்தில் கிடந்த தூப்பாக்கியை போலீசார் எடுத்து கருணாநிதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.