தந்தைக்கு திதி கொடுக்க சென்ற மகன் கடலில் மூழ்கி பலி
பூம்புகாரில் தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மகாராசபுரம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (52). விவசாயியான இவர் தை அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவிரி சங்கமத் துறையில் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக குடும்பத்துடன் வந்துள்ளார். தொடர்ந்து பூம்புகாரில் லைட் ஹவுஸ் எதிரே கடலில் குளித்துள்ளார். அப்போது அலையில் சிக்கி அவர் 200 மீட்டர் தூரத்திற்கு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
உறவினர்கள் சத்தம் போட்டதை அடுத்து அங்கு பணியில் இருந்த கடலோர காவல் குழும போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிய முருகானந்தத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டும் பலன் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் முருகானந்தம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கடலோர காவல் குழும போலீசா


