லண்டனில் செட்டிலாக வீட்டை விற்று தாய் பணம் கொடுக்காததால் மகன் தற்கொலை
லண்டனில் படித்து சென்னை வந்த மகன் வெளிநாட்டில் நிரந்தரமாக செட்டிலாக வீட்டை விற்று பணம் கொடுக்க தாயாரிடம் தொந்தரவு செய்தும், பணம் கொடுக்க மறுத்ததால் ஆன்லைனில் நைட்ரஜன் ஆக்சிஜன் ஆர்டர் செய்து பிளாஸ்டிக் கவரால் முகத்தை கட்டி சுவாசித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் கவரை தெருவைச் சேர்ந்த வசந்தா. இவரது கணவர் ரவிசங்கர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவர்களுடைய மகன் ஜோதி மணி(29) கடந்த 2024 ஆம் ஆண்டு லண்டனில் எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஒரு ஆண்டு படித்து முடித்துவிட்டு 2025 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்துள்ளார். வெளிநாட்டில் நிரந்தரமாக இருக்கப் போவதாக கூறி வீட்டை விற்பனை செய்து பணம் கொடுக்கும்படி தாய் வசந்தாவிடம் பிரச்சனை செய்துள்ளார். வசந்தா பணம் கொடுக்க மறுக்கவே மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்.
இந்நிலையில் பணம் கிடைக்காத மனவிரக்தியில் இருந்த ஜோதிமணி, ஆன்லைன் மூலம் ஹைட்ரஜன் சிலிண்டரை வாங்கி அருகில் வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்தபடி முகத்தில் பாலித்தீன் கவரை போட்டுக்கொண்டு ஹைட்ரஜன் சிலிண்டர் இருந்த டியூப் மூலம் காற்றை சுவாசித்து சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். உறங்கி விட்டு கதவை திறந்து பார்த்த தாய் வசந்தா, உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து பார்த்த போது உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் போலீசார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஜோதி மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

