இறந்த தாயை சற்கர நாற்காலியில் அமர வைத்து கொண்டு சென்ற மகன்.... பணமில்லாததால் பரிதாபம்

 
Son

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தாயிக்கு இறுதி சடங்கு செய்ய பணம் இல்லாததால் அவரது மகன் சக்கர நாற்காலியில் வைத்து 4  கிலோ மீட்டர் தொலையில் உள்ள மயானத்தில் தகனம் செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   
 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பாரதியார் நகரில் ராஜேஸ்வரி என்ற மூதாட்டி வசித்து வந்தார். 74 வயதான அவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தோல் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது கை கால்கள் செயல் இழந்து நடக்க முடியாமல் இருந்த நிலையில், அவரது மகன் முருகானந்தன் தனது தாயை பராமரித்து வந்துள்ளார். தாயின் நிலை அறிந்து அவரது மகன் சரிவர வேலைக்கு செல்லாததால் வறுமையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரது தாய் நேற்று காலை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். 

தோல் நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்ய யாரும் வரமாட்டார்கள் என்னைய மகன், இறுதி சடங்கு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால், தனது இல்லத்தில் இருந்து சக்கர நாற்காலியில் உயிரிழந்த தாயை அமர வைத்து, உடலை துணியால் சுற்றி செவலூர் பகுதியில் இருக்கும் மயானம் வரை 4 கிலோ மீட்டர் தள்ளிச் சென்று அங்கு தகனம் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயின் இறுதி சடங்கிற்கு பணம் இல்லாமல் தனி ஒருவராய் வீல் சேரில் வைத்து கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.