சொத்திற்காக அப்பாவை கொடூரமாக தாக்கிய மகன்..நெஞ்சை உலுக்கும் வீடியோ!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா சேகோ நிறுவனத்தின் உரிமையாளர் குழந்தைவேலு. இவருக்கு ஹேமா என்று மனைவியும், சக்திவேல் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர் . குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் தந்தையின் தொழிலை கவனித்து வந்துள்ளார். ஆத்தூரில் உள்ள தொழிற்சாலை பெரம்பலூரில் மாடர்ன் ரைஸ் மில் ஆகியவை உள்ள நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆத்தூரில் உள்ள தொழிற்சாலையை சக்திவேல் கவனித்து வந்ததாக தெரிகிறது. தொழிலில் ஏற்பட்ட கடனுக்காக சக்திவேல் வெளியில் கடன் வாங்கியுள்ளார். இதை குழந்தைவேலு கண்டித்துள்ளார். அத்துடன் கடனை அடைத்ததாகவும் தெரிகிறது. இதை தொடர்ந்து மகன் தொடர்ந்து கடன் வாங்கி வர சக்திவேல் அதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளார். இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத நிலை ஏற்பட்டுள்ளது. சக்திவேல் ரைஸ் மில்லில் தன்வசபடுத்த முயற்சிக்க குழந்தை வேலுக்கு 50 சதவீத விழுக்காடு பங்கு , அவரின் மாமனார் சுந்தரத்திற்கு உரிய பங்கு இருந்துள்ளது.
வங்கி கணக்கு உட்பட அனைத்து விஷயத்திலும் குழந்தை வேலுவின் பெயரே இருந்துள்ளது. இதனால் சக்திவேல் அதிர்ச்சி அடைந்துள்ள இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த குழந்தை வேலுவை சக்திவேல் கடுமையாக தாக்கியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த வேலையாட்கள் குழந்தை வேலுவை காப்பாற்றியுள்ளனர். படுகாயம் அடைந்த குழந்தைவேல் உடனடியாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைகளத்தூர் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். தந்தை, மகன் இடையான பிரச்சனையை பேசி தீர்ப்பதாக காவல்நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு சிகிச்சை முடிந்து குழந்தை வேலு வீடு திரும்பியுள்ளார்.
சேலம் ஆத்தூரை சேர்ந்த அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக சராமரியாக தாக்கும் காட்சிகள்.
— உலகத்தமிழர் (@World_Tamils1) April 25, 2024
https://t.co/Y8wWpYzfHX
இருப்பினும் இரண்டே நாட்களில் அவர் விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. இந்நிலையில் சக்திவேல் தனது தந்தையை குழந்தைவேலுவை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சி இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கைகளத்தூர் காவல்துறையினர் சக்திவேல் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.