எதிர்பார்த்தது ஒன்று... நடந்தது ஒன்று... ஜி.எஸ்.டி. மாற்றத்தால் ஆடம்பரப் பொருட்கள் விலை குறைவு; அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு..!

 
1

என்.ஐ.பி.எப்.பி., எனப்படும் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனம் ஆய்வறிக்கை: 

மத்திய அரசு கடந்த 2025 செப்., 22 முதல் ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை 5, 18 மற்றும் 40 சதவீதம் என மூன்று அடுக்குகளாக மாற்றியது. நுகர்வோர் சுமையை குறைக்கவும், பொருட்களின் தேவையை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
ஆனால், வரி குறைக்கப்பட்ட பிறகும் உணவு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது. 

கடந்த ஆண்டு மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தையும், அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. விலை மாற்றம் பொருட்கள் விலை மாற்றம் (%) நிலை கார் -7.52 விலை குறைவு ஏ.சி., -6.40 விலை குறைவு மோட்டார் சைக்கிள் -5.19 விலை குறைவு பால் +0.83 விலை உயர்வு நெய் +0.77 விலை உயர்வு விமான கட்டணம் +8.65 விலை உயர்வு ஏன் இந்த முரண்? ஆடம்பர பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் விற்பனையை அதிகரிக்க வரி குறைப்பு பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. 

ஆனால், அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை எப்போதும் இருப்பதால், அந்நிறுவனங்கள் விலையை குறைக்க ஆர்வம் காட்டுவது இல்லை. மேலும் வினியோக தொடரில் ஏற்படும் செலவுகள் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக விலைகள் உயர்வதாக அறிக்கை கூறுகிறது.