சாலமன் பாப்பையா மறைவு.. ரஜினிகாந்த் இரங்கல்..!

 
1

பிரபல பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் சாலமன் பாப்பையா (90) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சன் தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். டிவி மட்டுமின்றி சினிமாவிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். புது வருஷம், பாய்ஸ், எஸ் மேடம், சிவாஜி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி படத்தில் பக்கத்துவீட்டுக்காரர் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையை கொண்டிருக்கும்.

பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தைப் பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையா; அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.