திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட்ட அமைச்சர் நேரு

 
tn

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு  மேலாண்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களை இன்று  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " தமிழ்நாடு முதலமைச்சர் நகரங்களை தூய்மையாக்குவதற்கும், குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதற்கும் 'தூய்மையான மக்கள் இயக்கத்தினை' 03.06.2022 அன்று தொடங்கி வைத்தார்கள். இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் 4 வகையான தலைப்புகளில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த விழிப்புணர்வு இயக்கத்தை மேலும் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் 4 வகையான தலைப்புகளில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

tn

தூய்மை பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்தி அதனை நீடித்து நிலைக்கச் செய்திட தூய்மை இந்தியா திட்டம் (ந) 2.0 தொடங்கப்பட்டது. அனைத்து நகரங்களையும் குப்பைகள் இல்லாத நகரங்களாகவும், திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நகரங்களாகவும் ஆக்குவதே தூய்மை இந்தியா திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகரங்களாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் கழிப்பறைகளை வழங்குவதன் மூலம், அனைத்து நகர்ப்புறங்களையும் தொடர்ந்து 'திறந்தவெளி மலம் கழிக்காத நகரங்களாக' நீடித்து நிலைக்கச் செய்திட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேவைக்கேற்ப தனி நபர் வீட்டுக் கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள், பொது கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

KN Nehru

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்கள்,
1. எனது குப்பை எனது பொறுப்பு - வீடுகளில் இருந்து பெரும் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தல் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தல்.
2. எனது இடம் எனது பொறுப்பு காலி மனைகளில் குப்பைகளை கொட்டாது
இருத்தல் குறித்து விளக்குதல்.
3. பாவம் செய்யாதிரு அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து குப்பைகளை கீழே வீசாமல் இருத்தல்.
4. உங்கள் குப்பை உங்கள் பொறுப்பு
-
பொது இடங்களில் இருக்கும் குப்பைத் தொட்டியை முறையாக பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தல்.
இது போன்ற பல்வேறு விழிப்புணர்வு விவரங்களை கொண்ட குறும்படங்கள் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்களை சென்றடையும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.