60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே "பராபவ" ஆண்டு
May 11, 2026, 18:52 IST1778505764111
60 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே "பராபவ” ஆண்டு உருவாகியுள்ளது.
1967-ல் பேரறிஞர் அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற ஆண்டு - “பராபவ” ஆண்டு. அதேபோல், சரியாக 60 ஆண்டுகள் கழித்து 2026-லும் அதே “பராபவ” ஆண்டில்தான் விஜய் தலைமையிலான TVK ஆட்சியைப் பிடித்துள்ளது. 1967-ல் காங்கிரஸ் கட்சியின் நீண்டகால அரசியல் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து, திராவிட அரசியலின் புதிய காலத்தை அண்ணாதுரை தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி தொடர்ந்து நிலைத்து வந்தது. இப்போது, 60 ஆண்டுகளுக்கு பிறகு அதே பராபவ ஆண்டில், விஜய் தலைமையிலான TVK வெற்றி பெற்று தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 1967ஆம் ஆண்டு திராவிட அரசியலின் தொடக்கம். 2026 ஆம் ஆண்டு புதிய அரசியல் மாற்றத்தின் தொடக்கம் என சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

