முஹம்மது ஜுபைருக்கு சமூக நல்லிணக்க விருது - அண்ணாமலை கண்டனம்!!

 
annamalai mkstalin

ஆல்ட் நியூஸ் ஜுபைருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கியதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தி.மு.க., அரசு, ஒவ்வொரு வாரமும், புதிய வீழ்ச்சியை எட்டுவதில் தவறில்லை. குடியரசு தினத்தன்று சமூக நல்லிணக்க விருது, கடந்த காலங்களில் இந்த விருதைப் பெற்ற அனைவரையும் அவமதித்ததாகும். சமூக முரண்பாட்டை உருவாக்குவதற்கு தான்  இந்த நபர்  சரியான வகையாக இருக்ப்பார். 

tn

தற்கொலைக் வெடிகுண்டுத் தாக்குதலை சிலிண்டர் குண்டுவெடிப்பு என்று அவர்கள் தொடர்ந்து அழைப்பதால், உண்மையைச் சரிபார்ப்பவர்கள் என்ற போர்வையில் அரை உண்மையைக் கடைப்பிடிப்பவர்களிடம் புதிய விருப்பத்தை வளர்த்துக்கொண்டதால், திமுகவின் தேர்வு நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை.


வரிப்பணம் வீணாகிறது, ஆனால் திமுக அரசுக்கு அது முக்கியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பொய்ச் செய்திகள் திட்டமிட்டுக் காட்டுத்தீயாய்ச் சமூக வலைத்தளங்களில் பரப்படுகிறது. இந்த நிலையில் உண்மைகளை உரக்கச் சொல்லி மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சில ஊடகங்கள் செய்கின்றன. அப்படிச் செயல்பட்டு அவதூறுகளைத் துடைத்தெறிந்த ஊடகவியலாளர் திரு.  @zoo_bear அவர்களுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டது.என்று குறிப்பிட்டுள்ளார்.