சோப்ளாங்கி ஆட்சி... முதல்வர் விஜயை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்..!

 
1

கோவை மத்தியச் சிறையில் இருந்து கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். அவர் இன்று (அக்.31) வெளியிட்ட பதிவில்,

இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார். 

அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.

தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.

மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.

இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.

'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.