இத்தனை பிழைகளா..? சர்ச்சையில் சிக்கிய தவெக போஸ்டர்கள்..!

பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கக்கோரி, வேலூர் கிழக்கு மாவட்ட த.வெ.க சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியால் தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கம் தொடர்பாக வைக்கப்பட்ட பேனரில் “WE STAND FOR WOMEN HARRASEMENT” என அச்சிடபட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.“WE STAND AGAINST WOMEN HARASSMENT” என்பதே பெண்கள் துன்புறுத்தலுக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம் என்பதற்கான அர்த்தம். இது தெரியாமல் போராட்ட களத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் அதில், கையெழுத்து போட்டுவிட்டு சென்றனர். இதேபோல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறையை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தின் வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வைக்கப்பட்டுள்ள பேனரில் தவறிய என்பதற்கு பதிலாக ‘தவரிய’ எனவும் கண்டித்து என்பதற்கு பதிலாக ‘கன்டித்து’ என்றும் எழுத்துப் பிழைகளும் இருந்தன. இதனை பார்த்த நெட்டிசன்கள் எழுத்துப்பிழை இல்லாமல் எப்போது தான் சரியாக அச்சிட போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.