இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

அதில், தமிழ்நாட்டில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஜூன் 17ஆம் தேதி வரை மத்திய அரசிடம் இருந்து ஒரு கோடியே 18 லட்சத்து 17 ஆயிரத்து 690 டோஸ்கள் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 88 ஆயிரத்து 648 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், (மாநிலத்தின் மக்கள்தொகை தோராயமாக 7 கோடிக்கு மேல்)தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனை பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என தெரியுமா? – அரசு வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகளில் 66 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.