“என் வாழ்க்கையை மாற்றிய துணை முதலமைச்சர்”- சினேகா நெகிழ்ச்சி
தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டுகால சாதனைகளை கொண்டாடும் விதமாக ’Champions of tamilnadu’ விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சினேகா, “நானும் பேருந்து நிலையத்தில் பசிக்கு உணவும், பணமும் வேண்டுமென்று நின்றுள்ளேன். நீங்க பஸ் ஸ்டாண்டல, தெருவுல பார்த்துருப்பீங்க.... கொட்டு அடிச்சிட்டு கயிறு மேல நடக்குற கலை கூத்துதான் என்னோட பரம்பரை தொழில். சின்ன வயசுல நிறைய தடவ பலர் கிட்ட கை நீட்டி பிச்சை கேட்டிருக்கேன். இன்னைக்கு இந்த மேடையில் நான் இருக்கேன்னா என்னோட படிப்பும், விளையாட்டும், உதய் அண்ணாவோட உதவியும்தான்.
எனது ஜிம்னாஸ்டிக் திறமையை அடையாளம் கண்டது 'தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்'தான். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இல்லையென்றால், எனது வாழ்க்கையே திசை மாறிச் சென்றிருக்கும். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தனிக்கவனம் செலுத்தித் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை வளர்த்தெடுத்து வருகிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதற்குச் சாட்சிதான் இந்த நிகழ்ச்சி. இதற்குச் சிறந்த உதாரணம்” எனக் கூறினார்.

