#BREAKING ஸ்மிருதி மந்தனாவின் காதலரும் மருத்துவமனையில் அனுமதி

 
#BREAKING ஸ்மிருதி மந்தனாவின் காதலரும் மருத்துவமனையில் அனுமதி

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் காதலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Smriti Mandhana's wedding postponed: Father hospitalised - doctor provides  crucial health update | Cricket News - The Times of India

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இருந்து வருகிறார். இடதுகை பேட்டரான இவர் பல்வேறு கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இந்திய அணி வென்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய பங்கு வகித்தார். சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார். மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருதி மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனாவுக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில்  எதிர்பாராத விதமாக ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் திருமணம் திடீரென நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

Women Cricket Vice Captain Smriti Mandhana And Musician Palaash Muchhal  Wedding Date Out

ஸ்மிருதி மந்தனாவின் தந்தையை தொடர்ந்து வருங்கால கணவருக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இரு அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.