#BIG NEWS : விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா..!

 
Q

இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

 

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 282 ரன்கள் இலக்கை 44.1 ஓவரில் சேஸ் செய்த ஆஸ்திரேலியா வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது.

 

2வது ஒருநாள் போட்டியில் கம்பேக் கொடுத்த இந்திய அணி ஆஸ்திரேலியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று தோல்வியை பரிசளித்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது. அந்த அணியில் ஜார்ஜியா , எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ஜார்ஜியா, எல்லிஸ் பெர்ரி அரைசதம் அடித்தனர் .மறுபுறம் பெத் மூனி நிலைத்து விளையாடி சதமடித்து அசத்தினார் . அவர் 75 பந்துகளில் 138 ரன்கள் குவித்தார். இறுதியில் 47.5 ஓவர்கள் முடிவில் 412 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா அணி ஆட்டமிழந்தது. தொடர்ந்து 413 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடியது.

தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா , பிரதிகா ராவல் களமிறங்கினர் பிரதிகா ராவல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்லீன் தியோல் 11 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர் களமிறங்கினார். மறுபுறம் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த் அவர் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் .

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 50 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்த சதத்தால் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிகவேக சதமடித்தவர் என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.

விராட் கோலி இதற்கு முன் 52 பந்துகளில் சதம் அடித்து இருந்தார் . அந்த சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார் . மறுபுறம் ஹாமன்பிரீத் கவுர் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா 125 ரன்களில் ஆட்டமிழந்தார்