நடுவானில் இண்டிகோ விமானத்தில் புகை: லக்னோவில் அவசரமாக தரையிறக்கம்..!!

 
More hoax bomb threats for IndiGo flights arriving at Vizag airport

 இண்டிகோவின் 6இ6504 என்ற விமானம் மாலை அகர்தலாவில் இருந்து புறப்பட்டு டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 103 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என மொத்தம் 109 பேர் இருந்தனர்.

விமானத்தின் சரக்கு பகுதியில் புகை எச்சரிக்கை கண்டறியப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை லக்னோவுக்கு திருப்பி விட விமானி முடிவு செய்தார். இதையடுத்து மாலை 6.29 மணியளவில் விமானம் லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியதும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.

பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமான நிலையத்தில் முழுமையான அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல், கடந்த செப்டம்பர் 3-ந் தேதி வாரணாசியில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும் சரக்கு பகுதியில் புகை எச்சரிக்கை ஒலி எழுந்ததால், அந்த விமானம் முன்னெச்சரிக்கையாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் புகையோ, தீயோ எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.