ஸ்மார்ட்போன் விலை 16% உயர்வு- பட்ஜெட் போன்களுக்கு பெரும் பாதிப்பு

 
SmartPhones

ஸ்மார்ட்போன் விலை 16% உயர்ந்ததால் பட்ஜெட் போன்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2026 முதல் பாதியில் இந்திய ஸ்மார்ட்போன் விலைகள் சராசரியாக 16% உயர்ந்துள்ளன. மெமரி சிப் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள். ரூ.10,000-க்கு கீழ் உள்ள போன்களின் விலை சராசரியாக 32% உயர்ந்துள்ளது. ஆகவே விநியோகம் 65% சரிந்துள்ளது. ரூ.10,000-ரூ.15,000 பிரிவு விற்பனையும் 20% சரிந்துள்ளது. ரூ.20,000-க்கு மேற்பட்ட போன்களின் விற்பனை தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது. எக்ஸ்சேஞ்ச் சலுகை, வட்டியில்லா தவணை இதற்கு ஆதரவாக உள்ளன.