திருப்பதி மலை பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஸ்மார்ட் ஸ்டிக்
சிறுத்தையிடம் பக்தர்களை பாதுகாக்க வனத்துறைக்கு தேவஸ்தானம் ஸ்மார்ட் ஸ்டிக் வழங்கியது.

திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் 7 மைல் ஆஞ்சனனேய சாமி கோயிலில் இருந்து நரசிம்ம சாமி கோயில் இடையே உள்ள 3 கிலோ மீட்டர் பகுதியில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. ஏற்கனவே ஒரு சிறுமியை கொன்றதும், ஒரு சிறுவனை தாக்கியதும் இந்த இடத்தில் தான் எனவே இந்த இடத்தில் வனத்துறையினர் இரண்டு சிப்டிகளாக பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவ்வாறு கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ள வனத்துறையினருக்கு ஸ்மார்ட் ஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருளிலும் வனவிலங்குகளை பார்க்கும் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் வனவிலங்குகள் அருகில் வராமல் இருக்க அதிக சத்தம் எழுப்பும் ஒலி ஸ்பிக்கர் உள்ளதால் அதன் அலாறம் சத்தம் கேட்டால் வனவிலங்குகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிடும்.

இதனையும் மீறி வன விலங்குகள் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டால் அதன் அடியில் எலக்ட்ரானிக் மின் தாக்கி மூலம் ஷாக் கொடுக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. வன விலங்கு தாக்கினால் இந்த ஸ்மார்ட் ஸ்டிக் மூலம் ஷாக் கொடுப்பதால் அது பயந்து ஓடி விடும். இந்த ஸ்மார்ட் ஸ்டிக்குகள் தற்போது 20 வாங்கப்பட்டு வனத்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 20 ஸ்மார்ட் ஸ்டிக்குகள் வாங்கப்பட்டு கண்காணிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் வனவிலங்குகள் அச்சம் இல்லாமல் செல்லும் வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


