சீனாவின் வானளாவிய கட்டிடம் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்து..!!

 
1

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் 109 மாடிகள் கொண்ட உயரமான கட்டடம் உள்ளது. 1979ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடத்திற்கு சீனா ஜூன் என்ற பெயரும் உண்டு. இங்கு சீன அரசுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.இந்த கட்டடத்தின் மீது வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் மோதியது.

எதிர்பாராத இந்த சம்பவத்தால் கீழே சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். க,ட்டடத்தின் இடிந்த பகுதிகள், விமானத்தின் வால் பகுதி உடைந்து கீழே கிடந்தன. விபத்தில் சிக்கிய விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? அவர்கள் நிலை என்ன என்பது பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை. விமானம் மோதியதை அறிந்து, கட்டடத்தில் இருந்தவர்கள் பீதியில் அலறி ஓடினர். சாலைகள் எங்கிலும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. தகவலறிந்த எராளமான போலீசார், மீட்புக் குழுவினர் சம்பவ பகுதியில் முகாமிட்டுள்ளனர்.