“இவ்வளவு கேவலமான தவெக அரசு... ஜனநாயகன் எங்கே போனார்?”- மதுரையில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் ஆவேசம்

 
ச்

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக மதுரையில் போராடிய SFI மாணவர்களை, கை, கால்களை இழுத்துச் சென்ற போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

Image

டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக மதுரையில் போராடிய மாணவர்களை போலீஸ் குண்டுக்கட்டாக கைது செய்தது. இதனால் ஆவேசமடைந்த பெண், “நியாயமான முறையில் போராடும் மாணவர்களையும், பெண்களையும் மோசமான முறையில் நடத்துறீங்க.. இவ்வளவு கேவலமான அரசாக தவெக அரசு இருக்கு.. இதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர். அப்போது எங்கே போனார் எங்கே போனார்? ஜனநாயகன் எங்கே போனார்? ஜனநாயகன் படத்துக்கு டிக்கெட் விற்க போனாரா? என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் சென்னை எழும்பூர் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் ஜனதா கட்சியினரும் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். கரப்பான் கட்சிக்கு ஆதரவாக போராடிய SFI, DYFI இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். டெல்லியை தொடர்ந்து சென்னை, மதுரைக்கும் போராட்டம் பரவியது.