பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம்! செருப்பு வீச்சு

 
edappadipalanisamy

பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செய்ய வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒழிக கோஷம் போட்ட இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்தி விட்டு பசும்பொன் நினைவிடத்தை விட்டு வெளியோ செல்லும் வழியில் உள்ள தெப்பகுளம் அருகே இபிஎஸ் வாகனம் சென்ற போது அதிமுக ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரத்தை சேர்ந்த முருகவேல் மற்றும் பொதி குளத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் இபிஎஸ் சென்ற வாகனம் மீது செருப்பு மற்றும் கல்லை வீசியுள்ளனர்.


அவர்கள் வீசிய கல் மற்றும் செருப்பு இபிஎஸ் சென்ற காருக்கு முன் சென்ற கார் மீது விழுந்தது. இதனையடுத்து இருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.