திருத்தணி ரயில் நிலையம் அருகே எலும்புக்கூடு மீட்பு... ஆணா ?பெண்ணா? என போலீஸ் விசாரணை

 
suicide suicide

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை  மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நடமாட்டம் இருந்து வரும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம் நடை மேம்பாலம் அருகே ரயில்வே குடியிருப்பு பகுதி உள்ளது. இன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் பாழடைந்திருந்த ரயில்வே குடியிருப்பு பகுதியில் எலும்புக்கூடு இருப்பதாக குடியிருப்பு வாசிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Death

தகவலின் பேரில் அரக்கோணம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்தப் பகுதி திருத்தணி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவர்கள் திருத்தணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் தடய அறிவியல் நிபுணர் தரணி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் திருத்தணி போலீசார் எலும்புக்கூடை மீட்டு கோணியில் கட்டி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர். யாராவது ரயில் மார்க்கமாக இந்த பகுதிக்கு வந்து திருத்தணியில் இறங்கி கொலை செய்துவிட்டு அந்த பகுதியில் வீசிவிட்டு சென்றார்களா அல்லது ரயில்வே பணியில் அங்கே போதையில் சென்று ஒதுங்கிய நிலையில் இறந்து போனாரா அல்லது கள்ளக்காதல் ஜோடிகள் அங்கே ஒதுங்கிய நிலையில் தகராறு ஏற்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதாவது விஷ ஜந்துக்கள் கடித்து அதனால் இறந்து போனார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இறந்து போனது பெண்ணா? ஆணா? என தெரியவில்லை என்றும் எலும்புக்கூடுகள் உள்ள தலை மற்றும் கை கால்களை சென்னை தடவியல் பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் திருத்தணி சுற்றுப்புற பகுதியில் காணாமல் போன ஆண்கள் மற்றும் பெண்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.இந்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.