காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி

 
காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் பலி

தென்காசி மாவட்டம் புன்னயாபுரம் அருகே  லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.


தென்காசி மாவட்டம் புளியங்குடி  அருகே சிங்கிலிபட்டி- புன்னையாபுரம் இடையில்  சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் புளியங்குடியை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு புளியங்குடி பகுதியை சேர்ந்த கார்த்திக், வேல் மனோஜ், சுப்ரமணியன், மனோகரன், தங்கராஜ் மேலூர் காரில் பயணித்த ஒரு நபர்  புளியங்குடியை  நோக்கி வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஆறு பேர்  சம்பவ இடத்திலேயே பலியாகினர்.  

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தகவல்  தெரிவிக்கவே, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்கள் உடலை மீட்டு பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .