“ஆட்டம் போட்ட சொகுசு அறையில் கைதியாக சிவசங்கர் பாபா” சிபிசிஐடி போலீசார் விசாரணை!!

 

“ஆட்டம் போட்ட சொகுசு அறையில் கைதியாக சிவசங்கர் பாபா” சிபிசிஐடி போலீசார் விசாரணை!!

சிவசங்கர் பாபாவை சுஷில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

“ஆட்டம் போட்ட சொகுசு அறையில் கைதியாக சிவசங்கர் பாபா” சிபிசிஐடி போலீசார் விசாரணை!!

கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து அவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

“ஆட்டம் போட்ட சொகுசு அறையில் கைதியாக சிவசங்கர் பாபா” சிபிசிஐடி போலீசார் விசாரணை!!

டெல்லியில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பிறகு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே கடந்த ஒரு வார காலமாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .சிகிச்சைக்கு பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அவர் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் முதல் நாளான நேற்று சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து இன்று கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளிக்கு நேரில் அழைத்து சென்று சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது பற்றி சிவசங்கர் பாபாவிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.