“தவெகவை ஆட்சிக்கு வர விடாமல் உதயநிதி தடுத்தாரா? ஆதவ் அர்ஜூனா வார்த்தையை கட்டுப்படுத்த வேண்டும்”- சிவசங்கர்
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ள குதிரை பேரங்களை நடத்தி அதிமுக மற்றும் அமமுக கட்சி எம்எல்ஏ க்களின் ஆதரவை திரட்டிட திரைமறைவு காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டு வரும் நிலையில், அக்கட்சியினர் முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தான் தவெகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்ததாக உண்மைக்கு புறம்பாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ வுமான எஸ்.எஸ். சிவசங்கர் த.வெ.க வின் ஆதவ் அர்ஜுனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் இன்று தொகுதிக்குட்பட்ட திருமாந்துறை லெப்பை குடிக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தனக்கு வாக்களித்த பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்து வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் முதல்வராக பதவி ஏற்றுள்ள ஜோசப் விஜய் தான் ஒரு முதல்வர் என்பதையே மாந்து விட்டு மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு தேர்தலுக்கு முன்புஎதிர்கட்சியாக இருந்த போது பேசியது போலவே திமுக மீது அவதூறு பேசி வருவதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக மக்களிடம் திமுக ஒரு தீய சக்தி என்றும் கரூர் சம்பவத்தின் போதும் தேர்தல் ஆணையத்தின் கட்டு பாட்டில் தமிழ்நாடு இயங்கிய போதும் திமுக தலைவர் தான் தன்னை பிரச்சாரம் செய்யவிடவில்லை என்று பொய்யான பிரச்சாரங்களை கூறி மக்களிடம் அனுதாபம் தேடியது போல தற்போது முதல்வரான பிறகும் திமுக மீது பழிசுமத்தி அதை தனது கட்சி பெண்களைவைத்து இஸ்ஸ்டா கிராமில் வெளியிட்டு அனுதாபம் தேடபார்க்கிறார் விஜய் ஆனால். தமிழ்நாட்டு மக்களிடம் இது எடுபடாது என்று அவர் தெரிவித்தார்
அதிமுகவை உடைத்து அந்த கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை பெற குறுக்கு வழியில் சென்ற முதல்வர் விஜய் அது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டஎதிர்கட்சியினரை சந்தித்து அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தியதாக நாடகம் போட்டுள்ளது தற்போது அம்பலமாகிவிட்டது. ஏனெனில் அதிமுக வின் பொதுச்செயலாளரான எடப்பாடிபழனிச்சாமியை முதலில் சந்திக்காமல் கட்சியை உடைத்து வேறு சிலரை போய் அவர்பார்த்துள்ளது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று 10 நாட்கள் கூட நிறைவுறாத நிலையில் அக்கட்சியில் அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஆதவ்அர்ஜுனா தங்களது TVK ஆட்சி திமுக கூட்டணி கட்சிகளின் தயவில் நடப்பதை மறந்து 107 இடங்களை பெற்றுவிட்டு 176- இடங்களில் வென்றது போன்ற மமதையில் தமிழ்நாடே தனது காலடியில் இருப்பது போல் பேசிவருவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். 10 நாட்களில் தவெகவின் ஆட்சியை தமிழ்நாட்டு மக்களே விமர்சிக்க தொடங்கி விட்டதை சுட்டுகாட்டிய அவர் த.வெ.க வின் ஆட்சி திமுக கூட்டணி கட்சியினரின் தயவில் உள்ளதால் தினம்தினம் அவர்கள் செய்யும் தவறுகள் வெளிப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர், அரசியல் களம் என்பது இன்றைக்கு இருப்பது போல் நாளைக்கு இருக்காது, நாளை இருப்பது போல் நாளை மறுநாள் இருக்காது, எந்த நேரத்திலும் மாறக்கூடியது. ஆட்சிக்கு வந்து அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்த உடன் ஒட்டுமொத்த தமிழகமும் தன் காலடியில் வந்துவிட்டது போல் ஆதவ் அர்ஜுனா நினைத்துக் கொண்டிருக்கிறார். த வெக வேண்டுமானால்ஒருவேளை
அவர் கொடுத்த பணத்திற்கு அவரிடத்தில் அவரது கட்டுப்பாட்டில் இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டிலே இல்லை என்பதை அவர் மனதிலே கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரம் என்றைக்கும் நிலைத்திருப்பதில்லை. அந்த அதிகாரம் இன்றைக்கு வந்துவிட்ட காரணத்தால் தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார். சட்டமன்றத்திற்கு வந்து நாங்கள் பேசாமல் கட்டுப்பட்டு இருந்தோம் என்கிறார். சட்டமன்றத்தில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பதில் பேசுவதற்கு அவர்களுக்கு தகுதியோ திரானியோ அருகதையோ நேர்மையோ கிடையாது அதன் காரணமாகத்தான் முதல்வர் விஜயும் சட்டமன்றத்தில் பதில் பேசமுடியாமல் வீட்டுக்குப்போய் அங்கே ட்விட்டரில் பதில் போடுகிறார் என்றார். ஆனால் இன்றைக்கு அதை பூசி மெழுகுவதற்காக, மறைப்பதற்காக ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசினால் பதில் வரும் என்பதனால் தன்னுடைய தொகுதியில் போய் பேசுகிறார். இது உங்களுடைய தொழில் சாம்ராஜ்யம் அல்ல. இது தமிழ்நாடு, சுதந்திரத் தமிழ்நாடு. என்பதை உணர்ந்து ஆதங் அர்ஜுனா நாவடக்கத்துடன் பேசவேண்டும் என அவர் எச்சரித்தார். பாஜக தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சியை கொண்டு வரக்கூடாது என்ற நோக்கில் தான் கூட்டணியிலிருந்த வசிக உள்ளிட்ட தோழமை கட்சியினர் த வெ க-விற்கு ஆதரவு கரம் நீட்டின அதை மறந்து செயல்பட்டால் இந்த ஆட்சி கரைந்து போகும் என்பதைத்தான் திமுக தலைவர் ஸ்டாலினும் தெரிவித்திருக்கிறார் என்பதை அவர் த வெ க விற்கு நினைவு படுத்தினார்.

