“234 தொகுதிகளை தனித்து போட்டியிட்டும் ஓரிடத்தில் கூட டெபாசிட் பெறவில்லை”- நாதகயிலிருந்து விலகிய நிர்வாகி

 
ச் ச்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Image


நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில செயலாளர் முகமது அலி ஜின்னா, தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில துணைத்தலைவர் வினோத்குமார், இந்திய தேசிய காங்கிரஸின் மாவட்ட செயலாளர் பில்லா சத்யமூர்த்தி, தமிழக இதர பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாநில துணைத்தலைவர் சுப்பையா, இந்திய தேசிய தொழிற்சங்க மாநில செயலாளர் மா‌. இளம்வழுதி, மாணவர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தார். 

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், “கடந்த 5 ஆண்டுகளாக நான் தமிழர் கட்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத கட்சியாக ஒரே இடத்தில் இருக்கிறது. மேலும், கட்சியில் சரியான கட்டமைப்பு இல்லை, அரசியல் பாதையில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறது. ஒரு தொகுதியில் 100 மாநில பொறுப்பாளர்கள் நியமிப்பதால், தொண்டர்கள் இல்லாத கட்சியாக உள்ளது. மேலும், பெரியார் மாணவன் என்று சொன்ன பிறகு, பெரியாரை வீழ்த்துவது, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சித்தப்பா, திமுக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விமர்சனம் செய்து பின்னர் அமைச்சர்களை நண்பர்கள் என பேசுவது, தமிழக வெற்றிக்கழக விஜய் அன்பு தம்பி என்று இணைத்துக் கொள்வது பின்னர் அவரை விமர்சிப்பது என காலையில் ஒரு பேச்சு, மாலையில் ஒரு பேச்சு. ஆடு பகை குட்டி உறவு என்பது போல் சீமானின் பேச்சு உள்ளது. 234 தொகுதிகளை தனித்து போட்டியிட்டு ஓரிடத்தில் கூட டெபாசிட் பெறவில்லை. கட்சி தொடங்கி 15 ஆண்டுகளுக்குப் பிறகு 8 சதவீதம் வாக்குகள் பெற்றுக்கொண்டு, எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைகிறோம். மேலும் நாம் தமிழர் கட்சியின் விலகுவதாக இரண்டு தினங்களுக்கு முன்பே கட்சியின் தலைமை மின்னஞ்சலுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்” என தெரிவித்தார்.