சிறுமியை காதலித்த கல்லூரி மாணவன் கத்தியால் குத்தி கொலை- சிறுவன் வெறிச்செயல்

 
murder

சிவகாசியில் தங்கை முறை உறவினர் பெண்ணை காதலித்த கல்லூரி மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder

சிவகாசி அருகிலுள்ள  திருத்தங்கல் கண்ணகி காலனி எம்ஜிஆர் நகரில் வசிக்கும் துப்புரவு தொழிலாளிகளான ஜெகநாதன்- வீரலட்சுமி தம்பதியரின் மகன் வீரமாணிக்கம் (வயது 19). சிவகாசி அரசு கலைக்கல்லூரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார். வீரமாணிக்கம் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பன் ஆனந்த் என்ற ஆவுடையப்பனின் ( வயது 17 ) சித்தி மகளான நேரு காலனியில் வசிக்கும் முனீஸ்வரி( வயது 14 ) என்ற பெண்ணை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதன் காரணமாக வீர மாணிக்கத்திற்கும், ஆனந்திற்கும் ஏற்கனவே நடந்து வந்த பிரச்சனையில் ஆத்திரமடைந்த ஆனந்த், வீர மாணிக்கத்தை கண்ணகி காலனி கால்நடை மருத்துவமனை அருகே சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்து திடீரென அவரது நெஞ்சிலும், இடுப்பிலும் கத்தியால் குத்தி விட்டு தப்பி யோடினார்.  படுகாமையடந்து உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த வீர மாணிக்கத்தை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை கொடுத்த பின்பாக, மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் அனுமதித்ததில் அங்கு சிகிச்சை பலனின்றி வீரமாணிக்கம் உயிரிழந்தார். இதற்கிடையே வீரமாணிக்கத்தை கத்தியால் குத்திய சிறுவன் ஆனந்த் திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு தானே நேரில் சென்று சரணடைந்தார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.